Advertisement

மும்பையில் நடைபெறும் அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் #AA23 படத்தின் போட்டோ ஷூட்!

‘புஷ்பா’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியின் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது தமிழ் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து, தமிழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்திற்கான போட்டோ ஷூட் இன்று மும்பையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வெறும் போட்டோ ஷூட்டாக மட்டுமின்றி, டெஸ்ட் ஷூட்டாகவும் மிகப் பெரிய பொருட்செலவில் நடத்தப்பட உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோகேஷ் கனகராஜ் தமிழில் கடைசியாக இயக்கிய ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும், தனது திறமையாலும் கதையாலும் அல்லு அர்ஜுனை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இந்த திரைப்படம் ‘இரும்புக் கை மாயாவி’ கதையை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய பிறகே இந்த திரைப்படம் எப்படிப்பட்ட கதைக்களம் கொண்டது என்பது உறுதியாகத் தெரியவரும்.

Add a Comment

Leave a Reply