‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்படும் பன்முகத் திறமை வாய்ந்த இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பால் இன்று காலை காலமானார். அவரது மறைவு திரையுலகிலும் மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜ் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் செய்தி அறிந்ததும் பாக்யராஜின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.இந்நிலையில், தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள். அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும் என தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.
