‘ராம் இன் லீலா’ திரைப்படத்தின் ‘யார் யாரிவள்’ பாடல் வெளியீடு!

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரியோ ராஜ், தொடர்ந்து ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ‘ஜோ’, ‘ஸ்வீட் ஹார்ட்’, ‘ஆண்பாவம் பொல்லாதது’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தற்போது அவர் ‘ராம் இன் லீலா’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் வர்திகா கதாநாயகியாக நடித்துள்ளார். காதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் ‘ராம் இன் லீலா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ‘ராம் இன் லீலா’ திரைப்படத்தின் ‘யார் யாரிவள்’ பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading