கீர்த்தி சுரேஷ்- மிஷ்கின் நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் ‘ரிப்பிப்பீ’ பாடல் வெளியீடு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், தற்போது அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். நீதிமன்றத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படத்தில் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி, சமீபத்தில் தனது படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்துள்ளது.

இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில், படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் வருகிற ஜூலை 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வித்தியாசமான கதைக்களம் மற்றும் கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் கூட்டணி ஆகிய காரணங்களால் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ரிப்பிப்பீ’ வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading