நடிகர் பிரபாஸ் தற்போது ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பௌசி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இமான்வி, அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, ஜெயப்பிரதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், டோலிவுட் வட்டார தகவல்களின்படி, ‘பௌசி’ படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தில் பிரபாஸ் முழுவீச்சில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறையை மையமாகக் கொண்ட கதைக்களத்திற்காக வித்தியாசமான தோற்றத்தை பெற, பிரபாஸ் கடுமையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Add a Comment
