ரஜினி சாருடன் மீண்டும் நடிக்க ‘தர்மன்’ பட வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி – சிம்ரன் டாக்!

கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ திரைப்படத்தின் தலைப்பு இன்று (ஜூன் 24) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்திற்கு ‘தர்மன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அஷ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் அறிமுக விழா இன்று சென்னை நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், ‘தர்மன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘தர்மன்’ திரைப்படத்தின் தலைப்பு வெளியீட்டு விழாவில் நடிகை சிம்ரன் கலந்துகொண்டு பேசுகையில், “ரஜினிகாந்த் சாருடன் ‘பேட்ட’ திரைப்படத்தில் நடித்திருந்தேன். அவருடன் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பமாக இருந்தது. அந்த வாய்ப்பிற்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன்” என்று தெரிவித்தார்.

மேலும், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் மீண்டும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறிய அவர், இந்த வாய்ப்பை வழங்கிய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்தார். ‘தர்மன்’ திரைப்படம் திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading