கார்த்தியின் ‘சர்தார் 2’ ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு!

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையமைப்பில், கார்த்தி, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘சர்தார் 2’.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே நிறைவடைந்தது. இந்த படம் கடந்த ஆண்டிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், என்ன காரணமோ தெரியாமல் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டுப் பொங்கலுக்கு வெளியான ‘வா வாத்தியார்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியடைந்தது. இதன் காரணமாக ‘சர்தார் 2’ திரைப்படத்தையும் உடனடியாக வெளியிடவில்லை. தற்போது இந்த திரைப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கும் இன்னும் மூன்று மாத கால அவகாசம் உள்ளது. இந்த படத்தின் முதல் பாகமான ‘சர்தார்’ திரைப்படம் 2022ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading