அயோத்தி இயக்குனருடன் கைகோர்த்த விஜய் ஆண்டனி?

அயோத்தி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மந்திர மூர்த்தி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். இன்னும் தலைப்பு அறிவிக்கப்படாத இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் இணைந்துள்ளார். இதற்கு முன்பு தமிழ்குமரன் மற்றும் ரத்தம் படங்களில் விஜய் ஆண்டனியுடன் நடித்திருந்த அவர், தற்போது மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். மேலும், மற்றொரு முக்கிய பெண் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை ஒருவர் நடிக்கிறார்.

டாணாக்காரன், அயோத்தி, சிறை போன்ற படங்களின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், மீண்டும் மந்திர மூர்த்தியுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். மதுரையில் தொடங்கியுள்ள படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading