‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்த உண்மை சம்பவமான லட்சுமிகாந்தன் கொலை வழக்கை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

‘கொன்றால் பாவம்’, ‘மாருதிநகர் காவல் நிலையம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் தயாள் பத்மநாபன். தற்போது, உண்மை சம்பவமான லட்சுமிகாந்தன் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிசி ஆண்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், இளவரசு மற்றும் கவிதா பாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் சினிமா வரலாற்றில் இடம்பெற்ற உண்மை சம்பவத்தை புதிய கண்ணோட்டத்தில் பதிவு செய்யும் முயற்சியாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை 2எம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில் வெற்றி, அறிவுமதி என்ற கைதியாகவும், ரங்கராஜ் பாண்டே, சிவானந்தம் என்ற சிறை அதிகாரியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டனர். பிரிகிடா சாகா மல்லிகாவாகவும், சரவணன் சற்குணமாகவும், லொள்ளு சபா மாறன் மூர்த்தியாகவும், லிசி ஆண்டனி சூடாமணியாகவும், சுப்ரமணியம் சிவா தர்மனாகவும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் பெரியாரிய சிந்தனையாளரான சுப. வீரபாண்டியன், கதைக்கு சித்தாந்த ரீதியான ஆழத்தை வழங்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு எம்.வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளதுடன், தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி மாதத்திலேயே நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் டிரெய்லரை தற்போது வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வரும் ஜூலை 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading