Advertisement

பாலகிருஷ்ணாவின் NBK111 படத்தில் இதுவரை நடிக்காத புதிய கதாபாத்திரத்தில் நடிக்கும் காஜல் அகர்வால்!

தெலுங்கில் கடந்த 2023ஆம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பகவந்த் கேசரி’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த காஜல் அகர்வால், தற்போது பாலகிருஷ்ணா நடித்து வரும் அவரது 111வது திரைப்படத்திலும் மீண்டும் அவருக்கு ஜோடியாக இணைந்துள்ளார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. விஜயவாடாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் அகர்வால், பாலகிருஷ்ணாவின் 111வது படம் தொடர்பாக சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, ”பாலகிருஷ்ணாவின் 111வது திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பாலையாவுடன் பணியாற்றுவது மிகவும் சந்தோஷமான அனுபவமாக உள்ளது. அவர் ஒரு ஜாம்பவான். அதே நேரத்தில் மிகவும் கலகலப்பான நபரும் ஆவார். படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான சூழலை உருவாக்கி வைத்திருப்பார். மேலும், இந்த திரைப்படத்தில் இதுவரை நான் நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்னுடைய கதாபாத்திரம் மிகவும் தனித்துவமானதும் சுவாரஸ்யமானதும் ஆகும். இது ஒரு வலுவான கதாபாத்திரம். பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக இத்தகைய சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நான் நடிப்பேன் என்று உண்மையில் கனவிலும் நினைத்ததில்லை” என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply