கோபிசந்த், ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படம் ‘பாரத வர்ஷா’ தற்போது உருவாகி வருகிறது. பான் இந்தியா அளவில் தயாராகும் இந்தப் படத்தை இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்கி வருகிறார்.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இந்தப் படத்தை பவன் குமார் வழங்குகிறார். இந்திய வரலாற்றில் அதிகம் பேசப்படாத ஒரு முக்கிய அத்தியாயத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ‘பாரத வர்ஷா’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘வீர ஜெயதீரா’ பாடல் வெளியாகியுள்ளது. அனுதீப் தேவ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
