பிரபல தயாரிப்பாளர் கே.ஜே.ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் BTS வீடியோ வெளியீடு!

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பா. ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கீகாரம்’. தடகள வீரர்களின் வாழ்க்கைச் சவால்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் ‘அறம்’, ‘அயலான்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த கே.ஜே.ராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், அஜித் கோஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில், ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் பின்னணிக் காட்சிகள் அடங்கிய சிறப்பு பிடிஎஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் படப்பிடிப்பு நடைபெற்ற இடங்கள், படத்தை உருவாக்கிய விதம், தொழில்நுட்பக் குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் படப்பிடிப்புக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த பிடிஎஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading