Advertisement

‘தி கோட்’ பட காரின் நம்பர் பிளேட் நினைவு பரிசை கண்டு முதல்வர் விஜய் சொன்ன வார்த்தை … மனம் திறந்த‌ வெங்கட்பிரபு!

முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவரும் நிலையில், தயாரிப்பாளர் டி. சிவாவும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், விஜய்யுடன் தொடர்புடைய சில சுவாரஸ்ய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, “அந்த ஃப்ரேமை விஜய் சாரிடம் கொடுத்தவுடன் அதை திறந்து பார்த்த அவர் உடனே சிரிக்கத் தொடங்கினார். ‘இப்படியெல்லாம் ஃப்ரேம் செய்து கொண்டு வர வேண்டும் என்று உனக்குத்தான் தோன்றும்’ என்று கூறியபடி அதை மிகவும் ரசித்துப் பார்த்தார். ஒரு விஷயத்தை முழுமையாக நம்பி மனதில் நினைத்தால் அது நிச்சயமாக நடக்கும் என்பதற்கு இதுவே சான்று. உண்மையாக விரும்பினால் இந்த பிரபஞ்சமே அதை நிகழ்த்தும். அவர் உண்மையிலேயே ‘Greatest of All Time’ தான்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் டி. சிவா, “எங்களின் அன்புக்குரிய தளபதி, மாண்புமிகு முதல்வர் விஜய் சாருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். கடந்த 2017-ஆம் ஆண்டு அவரை நேரில் சந்தித்தபோது, மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து ஆட்சிப்பீடத்தில் அமர்வது போன்ற ஓவியத்தை ‘ஆட்சிப்பீடம்’ என்ற தலைப்பில் பரிசாக வழங்கினேன். அதைப் பார்த்த அவர் அதைப் பற்றி கேட்டபோது, ‘நீங்கள் மக்கள் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் அமர வேண்டும் என்பதே என் ஆசை’ என்று தெரிவித்தேன்.

அதற்கு அவர் புன்னகையுடன் ‘நேரம் வரும்போது சொல்கிறேன்’ என்று பதிலளித்தார். அந்த வார்த்தைக்கு ஏற்ற தருணம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ளது. இன்று அவரை முதல்வராக சந்தித்தபோது அந்த சம்பவத்தை அவரே நினைவுகூர்ந்து பேசியது எனக்கு மிகுந்த பெருமையை அளித்தது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான மாற்றத்தை உருவாக்கிய தருணமாக இதை நான் பார்க்கிறேன். அவரது இந்த பிறந்தநாளை தமிழகத்தின் புதிய மறுமலர்ச்சிக்கான நாளாக கருதுகிறேன்.

2017 முதல் அரசியலுக்கு வருமாறு நான் தொடர்ந்து கேட்டது எந்த சுயநலத்திற்காகவும் அல்ல. நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கேட்டேன். இன்று அது நனவாகியிருப்பதை காண்பது பெருமிதமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply