அனல் பறக்கும் ‘ஆல்பா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட், தற்போது இயக்குநர் ஷிவ் ராவில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல்பா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், அதிரடி மற்றும் உளவு கதைக்கள அம்சங்களுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை ஆண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு பல யுனிவர்ஸ் திரைப்படங்களை உருவாக்கி வந்த யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம், முதன்முறையாக ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ‘ஆல்பா’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தில் ஆலியா பட்டுடன் இணைந்து பாபி தியோல், அனில் கபூர் மற்றும் ஷர்வரி வாக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்மையை மையமாகக் கொண்ட அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படம், யாஷ் ராஜ் ஸ்பை யுனிவர்ஸின் முக்கிய படைப்பாக கருதப்படுகிறது.

முதலில் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, வருகிற ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் வெளியிடப்பட்ட டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் அதேபோல் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதிரடி மற்றும் பரபரப்பான காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரெய்லரில் ஆலியா பட்டின் ஆக்‌ஷன் தோற்றம், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை குறித்த சுட்டுக்காட்டுகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதன் மூலம் ‘ஆல்பா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading