‘கர்ணன்’, ‘பைசன்’ மற்றும் ‘ஜெய் பீம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ரஜிஷா விஜயன், தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரமின் சகோதரியாக நடித்திருந்த அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தனது இயல்பான நடிப்பின் மூலம் பல்வேறு கதாபாத்திரங்களில் திறமையை வெளிப்படுத்தி வரும் அவர், தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ரஜிஷா விஜயன் தற்போது இத்தாலிக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் கிளாமர் உடையில் எடுத்துக் கொண்ட ஹாட் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
