இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அனிருத் அமைத்த பின்னணி இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், படத்தின் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.
சில காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு தற்போது சென்னை நகரில் மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனுடன், ‘ராஜன் வகையறா’ திரைப்படத்தின் பணிகளையும் வெற்றிமாறன் ஒரே நேரத்தில் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ‘அரசன்’ திரைப்படத்தை இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் முக்கியமான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், அதன் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த திரைப்படத்திற்கு பிரபல சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் பணியாற்றி வருகிறார். இவர் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்திற்கும் சண்டைப் பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
