நடிகர் மாதவன் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பிரெட் லீ சந்திப்பு!

பிரபல ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பிரெட் லீ, சமீபத்தில் நடிகர் மாதவனை சந்தித்ததுடன் அவருடன் சேர்ந்து கோல்ப் விளையாடி உள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பிரெட் லீ பகிர்ந்து கொண்டுள்ளார். மாதவனுடன் சந்திப்பு குறித்து அவர் கூறும்போது, மாதவனின் விளையாட்டு திறமையையும் அவரது குணத்தையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.“மாதவனுடன் இணைந்து ஒரு சுற்று கோல்ப் விளையாடியது மிக்க மகிழ்ச்சி. அவர் தற்போது திரைத்துறையில் மிகவும் மதிக்கப்படும் நடிகர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி, திரைக்குப் பின்னாலும் அவர் உண்மையான அருமையான மனிதர் என்பதை தெரிந்து கொண்டேன். நல்ல நட்பு, சிறப்பான கோல்ப் ஷாட்கள். அடுத்த சுற்றுக்காக காத்திருக்கிறேன் நண்பா” என்று குறிப்பிட்டுள்ளார் பிரெட் லீ.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading