முடிவுக்கு வரும் பிரபல சீரியல் தொடர்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ‘கெட்டி மேளம்’ சீரியல் ஒன்று விரைவில் இறுதி கட்டத்தை எட்டப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீ குமார், சாயா சிங், சௌந்தர்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த சீரியல், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாக தொடங்கியது. இதுவரை 329 எபிசோட்களை கடந்திருக்கிறது. சமீபத்தில் கூட நடிகர் ஸ்ரீ குமார் கருப்பு வேடமிட்டு நடித்த காட்சிகள் இந்த சீரியலில் வைரலானது. ஆனால், தற்போது கெட்டி மேளம் சீரியல் முடிவுக்கு வருவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading