பிரபல சின்னத்திரை ஜோடிக்கு திருமணம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ தொடரில் நடிக்கும் ஷியாமந்தா கிரணும், ஜி5 சேனலில் ஒளிபரப்பாகும் ‘அயலி’ தொடரில் நடித்து வரும் ஆனந்த செல்வனும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆயுத எழுத்து’ என்கிற சீரியலில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அந்த சீரியலில் ஆனந்த் செல்வன் ஹீரோவாக நடித்திருந்தார். அதே சீரியலில் கோதை என்கிற கதாபாத்திரத்தில் ஷியாமந்தா நடித்திருந்தார். அந்த சீரியலில் நடித்த போது தான் இருவருக்கும் இடையே காதல் உருவானது கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் தற்போது திருமணபந்தத்தில் இணைந்திருக்கிறார்கள். கோவையில் நேற்று நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கெண்டனர்.

Add a Comment

Leave a Reply