பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்த நடிகர் பகத் பாசில்!

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், பிரித்விராஜ் மற்றும் பார்வதி ஆகியோரை மையமாகக் கொண்டு மலையாளத் திரைப்படத் தயாரிப்பில் காலடி எடுத்து வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது மற்றொரு முக்கியமான பாலிவுட் தயாரிப்பு நிறுவனமும் மலையாள சினிமா பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளது.

‘திரிஷ்யம் 3’ மலையாள பதிப்பு மற்றும் தற்போது உருவாகி வரும் ஹிந்தி பதிப்பை தயாரித்து வரும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் பஹத் பாசிலை மையமாகக் கொண்டு அடுத்தடுத்து இரண்டு மலையாள திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய பஹத் பாசில், “இந்த இரண்டு படங்களின் கதைகளும், அவற்றின் படைப்பாற்றல் நிறைந்த சிந்தனைகளும் என்னை மிகவும் கவர்ந்தன. ஒரு நடிகராக என்னை சவாலுக்கு உட்படுத்தும் கதைகளிலும், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் படைப்புகளிலும் நடிப்பதையே நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading