‘நூறு சாமி’ ஆன்மாக்களும் கவிதைகளும் நிறைந்தது – இயக்குனர் கவுதம் மேனன் நெகிழ்ச்சி பதிவு!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, இயக்குநர் சசி இயக்கியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் ஜூன் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படம் வெளியாவதற்கு முன்பாகவே திரையுலகைச் சேர்ந்த பலரும் சிறப்பு காட்சியில் படத்தை பார்த்து தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக இயக்குநர் சசியின் நெருங்கிய நண்பர்களும், பல முன்னணி இயக்குநர்களும் படத்தின் பல அம்சங்களை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில், ‘நூறு சாமி’ திரைப்படத்தை பார்த்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “சசி, உங்களுடைய ‘நூறு சாமி’ திரைப்படம் ஆன்மாவும் கவிதையும் கலந்த அழகான அனுபவமாக உள்ளது. நடிகை ஸ்வாசிகாவை திரையில் இருந்து கண்களை விலக்க முடியாத அளவுக்கு சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள். விஜய் ஆண்டனியை நகைச்சுவை கலந்த ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிகவும் ரசிக்க வைத்துள்ளீர்கள். அந்த கதாபாத்திரம் எனக்கு ‘மௌனராகம்’ திரைப்படத்தின் சில நினைவுகளை ஏற்படுத்தியது. அருமையான படைப்பை வழங்கியுள்ளீர்கள். உங்களுக்காக நாங்கள் அனைவரும் ஆதரவாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading