இயக்குனராகும் நடிகர் ராஜூ? வெளியான புது அப்டேட்!

பிக்பாஸ் சீசன் 5 மற்றும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ராஜு ஜெயமோகன், தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் கதாநாயகனாகவும் புதிய பயணத்தை தொடங்க உள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் அவர் முதன்முறையாக கதை, திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். அதேசமயம், படத்தின் நாயகனாகவும் நடித்துள்ளார்.

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘துணிவு’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய எச். வினோத், தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

ராஜூ ஜெயமோகன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே ‘நட்புனா என்னனு தெரியுமா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் திரைக்கதை ஆசிரியராகவும் செயல்பட்டுள்ளார். இந்த அனுபவங்களுடன் தற்போது முழுநீள திரைப்பட இயக்குநராக களமிறங்குகிறார். இப்படம் நேரடியாக ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading