நான் அப்படிப்பட்ட நபர் அல்ல… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மவுனி ராய்!

‘நாகினி’ தொலைக்காட்சி தொடரின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மவுனி ராய். மாடலாக தனது பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் தொலைக்காட்சி மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார். 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட மவுனி ராய், சில மாதங்களுக்கு முன்பு தனது விவாகரத்து குறித்து சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்திருந்தார். அதன் பின்னர் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின.

குறிப்பாக, கடந்த சில மாதங்களாக மவுனி ராய் ஓரினச் சேர்க்கையாளர் என்ற தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த வதந்தி குறித்து சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், “என்னைப் பற்றி நான் கேட்ட மிகப் பெரிய வதந்தி என்னவென்றால், நான் ஓரினச் சேர்க்கையாளர் என்பதுதான். வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் ஒரு பாறையைப் போல எனக்கு ஆதரவாக நின்ற குடும்பத்தினரும் நண்பர்களும் கிடைத்தது எனது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “எனக்கு ஆதரவளிப்பதற்காக எப்போதும் சிறந்த தோழிகள் இருக்கிறார்கள். என் வாழ்க்கையின் நல்ல காலங்களிலும், கஷ்டமான தருணங்களிலும், மிகவும் மோசமான சூழ்நிலைகளிலும் அவர்கள் என்னுடன் இருந்துள்ளனர். உங்களை உற்சாகப்படுத்தும் மற்றும் உங்களுக்கு துணையாக நிற்கும் பெண்கள் உங்கள் வாழ்க்கையில் இருப்பது மிகவும் முக்கியமானது. எனது தோழிகள் உண்மையிலேயே மிகவும் சிறந்தவர்கள்” என்று கூறியுள்ளார். மவுனி ராயின் இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading