நான் நடித்த திரைப்படங்களையே முழுமையாக நான் பார்த்ததில்லை… நடிகர் ஷாருக்கான் டாக்!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் தற்போது இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, ஷாருக்கானின் மகளான சுஹானா கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இயக்குநர் சாஜித் கான் தொகுத்து வழங்கும் ‘யாரோன் கி பாரத்’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஷாருக்கான், தனது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “நான் நடித்துள்ள ‘தீவானா’, ‘ஸ்வதேஸ்’, ‘பரதேஸ்’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை முழுமையாக பார்த்ததில்லை. டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகள் நடைபெறும் போது சில காட்சிகளை மட்டுமே பார்த்துள்ளேன். ஆனால் ஒரு சாதாரண ரசிகரைப் போல திரையரங்கில் அமர்ந்தோ அல்லது வீட்டில் அமர்ந்தோ எனது முழுப் படங்களையும் பார்த்ததில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் ஷாருக்கான், தனது சொந்த திரைப்படங்களையே முழுமையாக பார்த்ததில்லை என்று வெளிப்படையாக கூறியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் அவரது இந்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. தன்னுடைய திரைப்படங்களை ஒரு ரசிகனாக அமர்ந்து ரசிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை என்ற அவரது ஒப்புதல், ரசிகர்களிடையே வியப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading