மிகவும் கடுமையான விமர்சனங்களுக்கு பலமுறை நான் ஆளானேன் – மனம் திறந்த‌ நடிகர் ஹிருத்திக் ரோஷன்!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது சிறப்பான நடனத் திறமை மற்றும் தனித்துவமான நடிப்பின் மூலம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பாலிவுட்டை தாண்டி தென்னிந்தியாவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது திரைப்படங்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அண்மையில் ஹிருத்திக் ரோஷன் பகிர்ந்த கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளன. அதில் அவர் கூறியதாவது, “பொதுவாக ஒரு பிரபலத்தின் வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். வெற்றி கிடைக்கும் போது நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் தோல்வி வரும்போது பலர் மனமுடைந்து விடுகிறார்கள். உண்மையில் அப்படி இருக்கக் கூடாது. வெற்றியை எவ்வாறு இயல்பாக ஏற்றுக்கொள்கிறோமோ, அதேபோல் தோல்வியையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “என்னைப் பற்றியும் மிகவும் கடுமையான விமர்சனங்கள் பலமுறை வந்துள்ளன. ஆனால் அவை எதுவும் என்னை மனரீதியாக பாதிக்கவில்லை. தோல்வியை நாம் வெற்றியை நோக்கிச் செல்லும் ஒரு உந்துசக்தியாக மாற்றிக் கொள்ள வேண்டும். உளியால் செதுக்கப்படாத கல் சிலையாக மாறாது. அதுபோல வாழ்க்கையில் தோல்விகளை சந்திக்காமல் பெரிய வெற்றிகளை அடையவும் முடியாது” என்று கூறியுள்ளார். இதற்கிடையில், கிரிஷ்-4 திரைப்படத்தை ஹிருத்திக் ரோஷன் இயக்குவதுடன், அதில் கதாநாயகனாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

—

Add a Comment

Leave a Reply