அதிரடி ஆக்ஷன் என ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விஷாலின் ‘மகுடம்’ பட டீஸர்!

சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது தயாரிப்பாக உருவாகி வரும் ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் நடிகர் விஷால் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இப்படத்தில் விஷால் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முதலில் ‘ஈட்டி’ திரைப்பட இயக்குநர் ரவி அரசு இந்த படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. ஆனால் பின்னர் சில காரணங்களால் ரவி அரசு இந்த திட்டத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் படப்பிடிப்பை விஷாலே முன்னெடுத்து வருவதாக கூறப்பட்டது. இதற்கிடையில் வெளியான டீசர் அறிவிப்பில், ‘மகுடம்’ திரைப்படத்தை விஷால் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இயக்குநராக வேண்டும் என்பது தனது 30 ஆண்டுகால கனவு என்றும், அந்த கனவு இந்த திரைப்படத்தின் மூலம் நனவாகியுள்ளதாகவும் விஷால் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading