வசூலில் சாதனை படைத்த ராம் சரணின் ‘பெத்தி’!

2026ஆம் ஆண்டில் இந்திய அளவில் சுமார் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, ‘துரந்தர் 2’ திரைப்படம் வசூல் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மற்றொரு ஹிந்தி திரைப்படமான ‘பார்டர் 2’ 450 கோடி வசூலுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது 345 கோடி வசூலுடன் தெலுங்கு திரைப்படமான ‘பெத்தி’ மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. இதுவரை 320 கோடிக்கும் மேல் வசூலித்திருந்த தமிழ்த் திரைப்படமான ‘கருப்பு’ தற்போது நான்காவது இடத்திற்கு பின்னடைந்துள்ளது.

சிரஞ்சீவி நடிப்பில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘மன ஷங்கர் வர பிரசாத்காரு’ திரைப்படம் சுமார் 300 கோடி வசூலுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தென்னிந்திய திரையுலகைப் பொறுத்தவரை தற்போது ‘பெத்தி’ திரைப்படமே முதலிடத்தில் உள்ளது. தெலுங்கு திரையுலகில் மகன் ராம் சரண் நடித்த திரைப்படம் முதல் இடத்திலும், தந்தை சிரஞ்சீவி நடித்த திரைப்படம் இரண்டாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி திரைப்படமான ‘பூத் பங்களா’ 245 கோடி வசூலுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. மலையாள திரைப்படங்களான ‘த்ரிஷ்யம் 3’ 237 கோடிக்கும் அதிகமான வசூலுடன் இந்திய அளவில் ஏழாவது இடத்திலும், ‘வாழ 2’ திரைப்படம் 235 கோடி வசூலுடன் எட்டாவது இடத்திலும் உள்ளன. மராத்தி திரைப்படமான ‘ராஜா சிவாஜி’ 130 கோடி வசூலுடன் பத்தாவது இடத்தை பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading