இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனக்கென தனி முத்திரையை பதித்து வரும் லோகேஷ் கனகராஜ், தனது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய அவர், சமீபத்தில் வெளியான ‘29’ படத்தையும் தயாரித்து கவனம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில், பெண்களை மையமாகக் கொண்ட புதிய திரைப்படம் ஒன்றை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா கதையின் மையக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம்ப்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் இந்தப் படத்தை ஜி ஸ்குவாட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பிற விவரங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த புதிய முயற்சி ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
