டாக்டராக நடிக்கும் ரஜினிகாந்த்? தலைவர் 173 குறித்து வெளியான புது அப்டேட்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ‘தலைவர் 173’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்தப் படம் தற்போது முன்தயாரிப்பு பணிகளில் தீவிரமாக முன்னேறி வருகிறது.

சமீப நாட்களாக இப்படம் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இயக்குநர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சாண்டி மாஸ்டர் அமைக்கும் அதிரடி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பூந்தமல்லி பகுதியில் படத்திற்கான பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ‘தலைவர் 173’ படத்திற்கான போட்டோஷூட் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், அதில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக அவர் இப்படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading