யூடியூப் தளத்தின் மூலம் பிரபலமடைந்து, ஆல்பம் பாடல்கள் மற்றும் இசை வீடியோக்கள் வாயிலாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை தேஜூ அஸ்வினி. அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று, ‘பாரிஸ் ஜெயராஜ்’, ‘பிளாக்மெயில்’, ‘என்ன சொல்ல போகிறாய்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘மூன்றாம் கண்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது திரைப்பயணம் குறித்து பேசிய தேஜூ அஸ்வினி, ‘லவ்வர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு முதலில் தனக்கு கிடைத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த வாய்ப்பை ஏற்க முடியாமல் போனதாகவும், அதன் பின்னர் அந்த கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீ கவுரி பிரியா நடித்ததாகவும் கூறியுள்ளார்.
அதேபோன்று, ‘டிமாண்டி காலனி 2’ திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த வாய்ப்பும் சில காரணங்களால் கைகூடாமல் போனதாகவும், பின்னர் அந்த கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்ததாகவும் தேஜூ அஸ்வினி தெரிவித்துள்ளார். தனக்கு கிடைத்த முக்கிய வாய்ப்புகள் சில தவறிப்போனாலும், தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
