‘சியான் 63’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் விக்ரம் நடிக்கும் 63-ஆவது திரைப்படமான ‘சியான் 63’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் விக்ரம், தனது அடுத்த படத்திற்காக தீவிரமான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் முழுமையான ஆக்சன் படமாக உருவாக உள்ளது. இதற்காக நடிகர் விக்ரம் தனது உடல் தோற்றத்தை முற்றிலும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும், கதாபாத்திரத்திற்கேற்ற வகையில் உடலை கட்டுமஸ்தாக மாற்ற தீவிர உடற்பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நடிகை ரியா ஷிபு கதாநாயகியாக நடிக்கிறார். அதேபோல், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading