இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

இயக்குநர் கிருத்திகா உதயநிதி தனது அடுத்த படைப்பிற்கான முன்தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘வணக்கம் சென்னை’, ‘காளி’ மற்றும் ‘பேப்பர் ராக்கெட்’ ஆகிய படைப்புகளின் மூலம் தனித்துவமான இயக்குநராக கவனம் பெற்ற அவர், அண்மையில் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். தற்போது அவர் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், வித்தியாசமான கதைக்களத்துடன் படம் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி, இந்த புதிய கூட்டணியின் மூலம் ரசிகர்களுக்கு மற்றொரு புதிய அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால், இந்த கூட்டணி ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading