ரவி தேஜா நடித்துள்ள ‘இருமுடி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தெலுங்கு திரையுலகில் ‘மாஸ் மகாராஜா’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரவி தேஜா, தற்போது தனது 77வது திரைப்படமான ‘இருமுடி’ மூலம் ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறார். ‘மஜிலி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஐயப்ப பக்தராக தலையில் இருமுடி சுமந்தபடி ரவி தேஜா தோன்றியிருந்த தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

இந்நிலையில், ‘இருமுடி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, படம் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆன்மிகம், உணர்ச்சி மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் கலந்த இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading