கவனத்தை ஈர்க்கும் விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு’ படத்தின் டீஸர்!

நடிகர் விஜய் சேதுபதி, பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் புதிய பான் இந்திய திரைப்படமான ‘ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு’ படத்தில் நடித்துள்ளார. மிகப்பெரிய பொருட்செலவில் நடிகை சார்மி கவுர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் தபு, சம்யுக்தா மேனன், துனியா விஜய், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ‘ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், படம் விரைவில் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading