இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் பிரமாண்ட புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், ஜூன் 2ஆம் தேதி விஜயவாடாவில் நடைபெற்ற விழாவில் ராம் சரண், ஜான்வி கபூர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் திடீரென ராம் சரணை நோக்கி விரைந்து வந்தார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரி அந்த ரசிகரை கட்டுப்படுத்தி வெளியேற்றினார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கவனம் பெற்றது.
இதையடுத்து ராம் சரணின் பாதுகாப்பு அதிகாரி குறித்து ரசிகர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கினர். கெவின் குண்டா என்ற பெயருடைய அவர், சர்வதேச அளவில் அறியப்பட்ட குத்துச்சண்டை வீரர் என்றும், காம்பியா நாட்டைச் சேர்ந்தவராக இருந்து தற்போது இத்தாலியில் வசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பெத்தி’ திரைப்பட காலகட்டத்தில் ராம் சரணின் தனிப்பட்ட பாதுகாப்பு பொறுப்பை அவர் கவனித்து வருகிறார். அவரது தினசரி சம்பளம் ரூ.2 லட்சம் என சில தகவல்கள் வெளியானாலும், அந்த தொகை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. வெளிநாட்டு குத்துச்சண்டை வீரரை பாதுகாப்பு அதிகாரியாக நியமித்திருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
