நடிகர் எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்த ‘வதந்தி’ வெப் தொடர் 2022-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘வதந்தி 2’ ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியாக உள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள இந்த தொடரில் சசிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சசிகுமார், “இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். மதுரை பின்னணியிலான கதைகளும், ரவுடி வேடங்களும் எனக்கு அதிகமாக வந்துள்ளன. ஆனால் இந்த தொடரில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன்” என்றார்.
மேலும், ஒரு நிரபராதியை காப்பாற்ற முயற்சிக்கும் முக்கியமான கதாபாத்திரம் இது. போலீஸ் வேடமாக இருந்தாலும் நீண்ட தாடியுடன் நடித்துள்ளேன். அதற்கான காரணம் தொடரில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.அரசியல் குறித்து கேள்விக்கு, “நடிப்பதே என் வேலை. அரசியலுக்கு வருவதற்கான எண்ணமே இல்லை” என்று சசிகுமார் என தெரிவித்துள்ளார்.அதேபோல், வெப் தொடர்களில் நடிப்பது சினிமாவை விட அதிக உழைப்பை தேவைப்படுத்துகிறது என்றும், இந்த கதாபாத்திரத்துக்குப் பிறகு மேலும் பல போலீஸ் வேடங்கள் வரலாம் என்ற நம்பிக்கையையும் அவர் பகிர்ந்துள்ளார்.
