‘இருமுடி’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா, ரசிகர்களால் ‘மாஸ் மகாராஜா’ என கொண்டாடப்படுகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாஸ் ஜாதரா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது தனது 77வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த திரைப்படத்தை ‘மஜிலி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில், ரவி தேஜா ஐயப்ப பக்தராக தலையில் இருமுடி சுமந்தபடி வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளித்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது ‘இருமுடி’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அதிரடி மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரவி தேஜாவின் வித்தியாசமான கதாபாத்திரமும், படத்தின் காட்சியமைப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading