தனுஷின் ‘ஓம்’ படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் மம்மூட்டி முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் நஸ்ருதீன் ஷா ஆகியோரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.
ஓம் திரைப்படம் அக்டோபர் மாதம் 16-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘அலாக்கா லோவா’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் பாடலில் தனுஷின் நடனமும், மம்மூட்டியின் தோற்றமும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
தற்போது, படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக திருவண்ணாமலை கோவில் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. அங்கு தனுஷை நேரில் காண ரசிகர்கள் அதிக அளவில் திரண்டனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவன் பக்தராக அறியப்படும் தனுஷும், படத்தின் தலைப்பும் கருத்தில் கொண்டு, ‘ஓம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையிலேயே நிறைவடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
