ஓய்வெடுக்க ஊட்டி சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் நேற்று மதியம் கர்நாடக மாநிலத்தின் மைசூரு வழியாக கார் மூலம் ஊட்டி வந்தடைந்தார். அவர் அங்குள்ள பிரபலமான ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த நிலையில், அவரது வருகை குறித்து நேற்று இரவு வரை பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு எந்த தகவலும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஊட்டியில் தங்கியிருப்பதாகும் தகவல் நேற்று இரவு வேகமாக பரவியது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள், அவர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் முன்பாக திரண்டனர். ரசிகர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஓட்டலின் பிரதான நுழைவாயில் உடனடியாக மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு சுமார் 8.45 மணியளவில் தனது அறையில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், ஓட்டல் முன்பு காத்திருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். ரசிகர்களின் நலம் குறித்து அன்புடன் விசாரித்த அவர், அவர்களுடன் நினைவுப் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார். அவரது இந்த திடீர் ஊட்டி பயணத்திற்கான காரணம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், அவர் இன்று மதியம் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading