இளம் நடிகைகளில் கவனம் ஈர்த்து வருபவர்களில் ஒருவர் பாக்யஸ்ரீ போர்ஸ். தெலுங்கில் மிஸ்டர் பச்சான் மற்றும் கிங்டம் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இருப்பினும் ஒரு குறிபிடத்தக்க பெரிய வெற்றி கிடைக்கும் என காத்திருந்த இவருக்கு லெனின் திரைப்பட வெற்றி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
தெலுங்கு நடிகர் அக்கில் அக்கினேனி நடித்த ‘லெனின்’ திரைப்படம் பாக்யஸ்ரீ போர்ஸின் கேரியரில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக வெற்றிக்காக காத்திருந்த அகிலுக்கும், நிலையான இடம் தேடி வந்த பாக்யஸ்ரீக்கும் 100 கோடி வசூலை கடந்த இந்த படம் முக்கிய பிரேக்த்ரூவாக அமைந்துள்ளது.
இந்த வெற்றிக்குப் பிறகு அவர் தேர்வு செய்யும் கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் அவரது மார்க்கெட்டை மேலும் உயர்த்தும் என்று சினிமா வட்டாரங்கள் கருதுகின்றன. தற்போது அவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘சேயோன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த கூட்டணி ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், ‘சேயோன்’ படம் பாக்யஸ்ரீ போர்ஸின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு வெற்றியைப் பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
