ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தில் தனுஷ் தற்போது பிஸியாக உள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பின் இடையே, தனது இரண்டு மகன்களுடன் அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த ஆக்ஷன் படத்தில், மம்முட்டி, ஸ்ரீலீலா, சாய் பல்லவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த வேலைகளுக்கு இடையில், தனுஷ் தனது மகன்களுடன் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு சென்றார். அப்போது கோயிலில் நடைபெற்ற கோ-பூஜையிலும் அவர் பக்தியுடன் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. தனுஷ் கோயிலுக்கு வந்த தகவல் பரவியதும், ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவரை நேரில் காணவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
