ஜூலை 31ல் வெளியாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’

லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில், முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘படம் சிக்மா’.

இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பரியா அப்துல்லா நடித்துள்ளார். மேலும், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்புதாசன், யோகி ஜாபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த திரைப்படம் வருகிற ஜூலை 31-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வருகிற ஜூன் 19-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல் திரைப்படமான ‘சிக்மா’ வெளியாக இருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading