பாலிவுட் திரைப்பட நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே, சமூக வலைதளங்களில் தொடர்ந்து தன்னை நோக்கி வரும் விமர்சனங்கள் மற்றும் கேலி பதிவுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள பூனம் பாண்டே, தனது சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் நடவடிக்கைகளால் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வந்துள்ளார். குறிப்பாக, 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றால் நிர்வாணமாக தோன்றுவேன் என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான காணொளி ஒன்றை பகிர்ந்து, தன்னை தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த காணொளியில் பேசிய அவர், “என்னைப் பற்றி முழுமையாக அறியாமல் யாரும் எந்த முடிவுக்கும் வர வேண்டாம். இணையதளங்களில் தொடர்ந்து என்னை விமர்சிப்பதும், தவறாக சித்தரிப்பதும் மிகுந்த வேதனையை அளிக்கிறது. நானும் ஒரு மனிதர்தான். எனக்கும் உணர்வுகள் இருக்கின்றன. என்னைப் பற்றி தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு கொஞ்சம் இரக்கத்துடன் சிந்தியுங்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும், திரைப்படத் துறையில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெறுவதற்காக இன்னும் போராடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பூனம் பாண்டே பகிர்ந்துள்ள இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
—
