100-வது படத்தில் இரட்டை வேடமா? ‘கிங் 100’ கிளிம்ஸ் வெளியீடு!

நடிகர் நாகர்ஜுனா 1986-ம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்து வரும் அவர், தற்போது 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணையவுள்ளார். அவரது 100-வது திரைப்படம் குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது.

நாகார்ஜுனாவின் 100-வது படத்தை தமிழ் இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கவுள்ளார். ‘நித்தம் ஒரு வானம்’, ‘ஆகாசம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள அவர், இந்தப் புதிய படத்தை இயக்குகிறார். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்போது ‘கிங் 100’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடும் நாகார்ஜுனாவுக்கு ரசிகர்களும் திரையுலகைச் சேர்ந்த பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ‘கிங் 100’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ ரசிகர்களால் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இப்படத்தை வரும் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading