கிளாமர் புகைப்படங்களால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை காஜல் அகர்வால்!

ஒரு காலகட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் காஜல் அகர்வால். தனது துடிப்பான நடிப்பு, சிறப்பான நடனத் திறன் மற்றும் எந்த தயக்கமும் இல்லாமல் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் திறமையால் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அவர், தற்போது ஒரு ஆண் குழந்தையின் தாயாகவும் உள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக காஜல் அகர்வாலுக்கு ஆண்டுதோறும் ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தற்போது இந்தி மொழியில் உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ மற்றும் ‘ராமாயண்’ திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல் தெலுங்கு திரையுலகில் நடிகர் பாலகிருஷ்ணாவின் 111-வது திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து தினமும் ஒளிப்படப் பதிவு நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். திருமணத்திற்கு முன்பு இருந்த அதே இளமையான தோற்றத்தையும் அழகையும் இன்றளவும் தக்க வைத்திருக்கும் காஜல் அகர்வால், புதிய திரைப்பட வாய்ப்புகளைப் பெறும் நோக்கில் இந்த ஒளிப்படப் பதிவுகளை மேற்கொண்டு வருகிறார் என்று திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading