ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் ஆக்ஷன் கிங் அர்ஜூனின் ‘ப்ளாஸ்ட்’ திரைப்படம்!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ப்ளாஸ்ட்’. இந்த திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபிராமி மற்றும் பிரீத்தி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள நிலையில், பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்புப் பணிகளை செய்துள்ளார். ‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டக் காணொளி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்த நிலையில், ‘ப்ளாஸ்ட்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடமிருந்து திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக, முதல் நாளில் மட்டும் திரைப்படம் ரூ.1.15 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவு கிடைத்து வருவதால், வரவிருக்கும் நாட்களில் ‘ப்ளாஸ்ட்’ திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading