தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமாரின் தாயார் மோகினி மணி இன்று (மே 30) காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85. கொல்கத்தாவைச் சேர்ந்த சிந்தி சமூகத்தைச் சேர்ந்த மோகினி மணி, நடிகர் அஜித் குமாருடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நல பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தாயார் மறைந்த நேரத்தில் நடிகர் அஜித் குமார் துபாயில் இருந்ததாக கூறப்படுகிறது. தாயாரின் மறைவு செய்தியை அறிந்ததும் உடனடியாக சென்னை திரும்பியுள்ளார். இதற்கு முன்பு, 2023-ஆம் ஆண்டு அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் காலமானார். சுப்பிரமணியம் – மோகினி மணி தம்பதியருக்கு அஜித் குமார், அனில் குமார் மற்றும் அனுப் குமார் என மூன்று மகன்கள் உள்ளனர்.
மோகினி மணியின் இறுதிச்சடங்கு சென்னை பாலவாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் குமாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
—
