கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரஃப்தார்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா?

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான ‘பேபி ஜான்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தின் ரீமேக்காக உருவாக்கப்பட்டது. இயக்குநர் அட்லி தயாரித்திருந்த இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘ரவுடி ஜனார்தனா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள மற்றொரு இந்தி திரைப்படத்திற்கு ‘ரஃப்தார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ராஜ்குமார் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அனுராக் தாக்கூர், ரோஹன் வர்மா, தான்யா மணிக்தலா மற்றும் ரஜத் கபூர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அமேசான் எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் வழங்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதித்யா நிம்பால்கர் இயக்கியுள்ளார். மேலும் நடிகர் ராஜ்குமார் ராவின் மனைவியும் நடிகையுமான பத்ரலேகா தனது காம்பா பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் கதை குறித்து படக்குழு கூறியதாவது, “வேகமாக வளர்ந்து வரும் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தையும், மிகுந்த லட்சிய உணர்வுடன் வாழும் ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கிடையேயான உணர்ச்சி மிக்க உறவையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. பணம், அதிகாரம் மற்றும் பேராசை அதிகரிக்கும் போது, வெற்றிக்காக அவர்கள் கொண்டிருக்கும் ஆசை காதலுடன் மோதத் தொடங்குகிறது. அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மையக்கரு. மேலும் இந்தியாவின் வணிகக் கல்வி முறையை நையாண்டியாகவும், அறிவை வளர்க்க வேண்டிய கல்வி எவ்வாறு முழுமையாக வணிகமயமாக மாறியுள்ளது என்பதையும் இந்த படம் பேசுகிறது” என்று தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், வருகிற ஜூலை 24ஆம் தேதி வெளியாக இருந்த ‘ரஃப்தார்’ திரைப்படம் தற்போது அக்டோபர் 16ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading