நடிகர் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஹிருதயபூர்வம்’ திரைப்படத்தை இயக்கிய சத்யன் அந்திக்காடு, மீண்டும் மோகன்லாலை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு சத்யன் அந்திக்காடு மற்றும் மோகன்லால் கூட்டணியில் வெளியான ‘எന്നும் எப்பொழுதும்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணியில் ‘ஹிருதயபூர்வம்’ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சத்யன் அந்திக்காடு மற்றும் மோகன்லால் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த திரைப்படத்தை மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமாக பார்க்கப்படும் ஆசீர்வாத் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த புதிய கூட்டணியின் திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
