யூடியூப் தளத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவராக உருவெடுத்தவர் வி.ஜே. சித்து. சமூக வலைத்தளங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள அவர், சில தொலைக்காட்சி சேனல்களிலும் விஜேவாக பணியாற்றியுள்ளார். தற்போது அவர் முதன்முறையாக சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘டயங்கரம்’. இந்த திரைப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பல கட்டங்களாக சென்னை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் வி.ஜே. சித்து என்ஜினியரிங் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்னும் ஒரு வார கால படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பையும் முடித்தவுடன் உடனடியாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த திரைப்படத்தை வரும் ஜூலை மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
